New fruits come to the market and the fruits they get

ரம்புட்டான் பழம்:

ரம்புட்டான் பழம் தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. இந்தப் பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

கிவி:

கிவி பழமும் மிகவும் சுவையானது. இப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

டிராகன் பழம்:

விந்தையான தோற்றம் கொண்ட இப்பழம், தித்திக்கும் சுவையை அளிப்பது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.

ஆலிவ் பழம்:

பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழங்களில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ் பழங்கள்தான் மிகவும் சிறந்தவை. இவற்றை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும், புற்றுநோய் தடுக்கப்படும்.

பேசன் பழம்:

பிரேசிலை தாயகமாகக் கொண்ட இந்தப் பழம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான சதைப்பகுதியைக் கொண்டது. இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை குணமாக்குவதில் மிகவும் சிறந்தது.

மங்குஸ்தான் பழம்:

ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இது வயிற்றுப்போக்குக்கு உடனடி தீர்வளிக்கிறது.