மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவும் மூலிகை டீ

தேவையானவை 

இலவங்கப்பட்டை குச்சி, 

1/2 கப் எலுமிச்சை சாறு, 

1/4 கப் இஞ்சி சாறு, 

1/2 டீஸ்பூன் மஞ்சள் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

தேவைப்படின் சிறிதளவு தேன் கலந்துக் கொள்ளலாம். இந்த மூலிகை டீயை ஒரு நாளைக்கு மூன்று முறை என்று குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மிளகு

சிறிதளவு மிளகு பொடியை எள் எண்ணெயுடன் கலந்து, பேஸ்ட் போல செய்து, அதை மூக்கின் கீழ் தடவி வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு

பூண்டை பெறுமனே சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சூடான நீர்

ஒரு துணியை சூடான நீரில் நனைத்து, அதை நமது முகத்தின் மீது வைத்து மெதுவாக ஒத்தடம் கொடுத்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல மாற்றம் கிடைக்கும்.

தக்காளி தேநீர்

ஒரு கப் தக்காளி ஜூசில் சிறிது பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, குடிக்க வேண்டும். இதேபோல தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.