முடக்குவாத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கையான வழிமுறைகள்..!!

மூட்டுகளில் ஏற்படும் வலி தான் வாதம் எனப்படுகிறது. மனிதனுக்கு ஏற்படும் வாத நோய்களில் பல்வேறு வகைகள் உண்டு. இதில் அதிகளவிலான பாதிப்பு கொண்டது தான் முடக்குவாதம். இந்த வகையிலான வாத நோயைக் கொண்டவர்களுக்கு உடலில் எந்தவிதமான செயல்பாடுகளும் இருக்காது. உடலில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் பாதிக்கப்பட்டு, வீட்டின் ஒரு மூலையில் நம்மை இது முடக்கி உட்காரவைத்து விடும். இது சரவாங்கி என்றும் கூறப்படுகிறது. எதிர்ப்புச் சக்தியில் குறைபாடு ஏற்படும் போது, இந்த பிரச்னை உருவாகிறது. தொடக்கத்தில் மூட்டுகளில் வலி ஏற்படும், அதை தொடர்ந்து உடலில் இருக்கும் அனைத்து மூட்டுகளிலும் பரவ ஆரம்பிக்கும். மூன்றாவது கட்டத்தில் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு , நான்காவது கட்டத்தில் ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையே இது முடக்கிவிடும். தரையில் கால்களை ஊன்ற முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும். இந்த பிரச்னை அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடியது தான். இதை இயற்கையான முறையில் சரிபடுத்தக்கூடிய வழிமுறைகளை பார்க்கலாம்.

natural remedies to get rid of rheumatoid arthritis

மஞ்சள்

நமது உண்ணும் உணவுகளில் மஞ்சளுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒரு விழுப்புண்ணில் இருந்து புற்றுநோய் பாதிப்பு வரை குணப்படுத்தும் வல்லமை கொண்டது மஞ்சள். நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் மஞ்சளின் பயன்பாடு அளவிட முடியாததாக உள்ளது. அனைத்து வகையான உணவுகளில் சேர்ப்பதற்கான திறன் கொண்ட மஞ்சள், முடக்குவாத பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியதாக உள்ளது. அலோபதி மருந்து முறையில் முடக்குவாதத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகளிலும் மஞ்சளின் சேர்க்கை இடம்பெற்றிருக்கும். தினசரி உணவில் மஞ்சளை தவிர்க்காமல் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை தரும். 

சாம்பிராணி

ஆங்கில மருத்துவத்தில் முடக்குவாதத்துக்கு மஞ்சளுடன் சேர்த்து கொடுக்கப்படும் மற்றொரு மருந்து போஸ்வில்லியா. இதுதான் தமிழில் சாம்பிராணி என்று பயன்படுத்துகிறோம். முடக்குவாத பிரச்னைக்கு சாம்பிராணி ஒரு அருமருந்தாகும். பரங்கி மரத்தின் பிசினில் இருந்து செய்யப்படும் சாம்பிராணிக்கு நிறைய நற்குணங்கள் உள்ளன. இது எலும்பு பிரச்னை, மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கூடியதாகும். இதுபோன்ற கம்யூட்டர் சாம்பிராணியில் பலன் கிடைக்காது. சாம்பிராணி மூலம் கிடைக்கும் புகையை மூச்சுவழியாக சுவாசிப்பதால், நமக்கு சைனஸ் பிரச்னை, நுரையீறல் சார்ந்த பிரச்னைகள் உடனடியாக நீங்கும். மேலும், சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் உடலில் எங்கும் நீர் கோர்க்காது. 

natural remedies to get rid of rheumatoid arthritis

முடக்கத்தான் கீரை

உடலுக்கு நலன் சேர்க்கும் பல்வேறு கீரைகளில், முடக்கத்தான் கீரை பல்வேறு ஆரோக்கிய நலன் சார்ந்து இருக்கும் குறைபாடுகளை நீக்கி நன்மை தருகிறது. குளிர்காலங்கள் எனப்படும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வாத நோய்கள் அதிகமா வரக்கூடும். அப்போது சித்த மருத்துவ முறைகளில் முடக்கத்தான் கீரையை அதிகம் சாப்பிடுமாறு வலியுறுத்தப்படுகிறது. நெஞ்சுச் சலி, கபம் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு குளிர்காலங்களில் வாத நோய் ஏற்படக்கூடும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நினைத்து மூட்டு வலி உள்ள  பகுதிகளில் தேய்த்து வந்தால் வேதனை குணமடையும்.

பித்தப்பையில் கல் வராமல் தவிர்ப்பது எப்படி- இயற்கை வழியில் தீர்வு..!!

பிரண்டை

தமிழ் நிலப் பகுதிகளில் பிரண்டையில் 10 வகைகள் காணப்படுகின்றன. இதில் நான்கு பட்டைகளைக் கொண்ட கொண்ட சாதாரணப் பிரண்டையைத் தான் நம்மில் பலரும் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் நரம்பு முடிச்சுகளில் வாயுவின் சீற்றத்தால் தேவையில்லாமல் தேங்கிவிடும் நீரை கரைத்துவிடும். மேலும் இதை முருங்கைக் கீரையோடு சமைத்து சாப்பிடும் போது முடக்குவாதம் குணமடைகிறது. இதன்மூலம் கிடைக்கும் கால்ஷியம், வைட்டமின் டி3 போன்றவை எலும்பு நோய் சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிர்வாரணம் தருகிறது. 

சூடான உணவுகளில் எலுமிச்சைச் சாற்றை பிழிவது தவறு- ஏன்னு தெரிஞ்சுக்கோங்க..!!

மாவிலங்கு பட்டை

முடக்குவாத பிரச்னையால் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மாவிலங்கு பட்டையை சித்த மருத்துவம் வழங்குகிறது. மேலும் குறிப்பிட்ட இந்த பாதிப்புடன் காணப்படும் அறிகுறைகளை வைத்து மாவிலங்கு பட்டையுடன் சில மூலிகைகள் சேர்க்கப்படுகிறது. அதன்படி தயாரிக்கப்படும் கஷாயத்தை வைத்து மருந்து வழங்கப்படுகிறது. மாவிலங்கு பட்டை பொடி வடிவிலும் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் பொடி எடுத்துக் கொண்டு, அதை 200 மி.லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அது 100 மி.லிட்டர் தண்ணீர்யாக வந்தவுடன் கஷாயமாக்கி குடித்து வரவேண்டும். காலை மற்றும் மாலையில் இந்தப் பொடியை குடித்து வருவதன் மூலம், விரைவாகவே முடக்குவாதம் பிரச்னை முழுமையாக குணமடையும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios