சூடான உணவுகளில் எலுமிச்சைச் சாற்றை பிழிவது தவறு- ஏன்னு தெரிஞ்சுக்கோங்க..!!
எலுமிச்சைப் பழத்தை சூடான உணவு மற்றும் தண்ணீரில் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
lemon
மனித உடல்நலனுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்யக்கூடியதாக உள்ளது எலுமிச்சைப் பழம். இதனுடைய இலைகளும் பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. எலும்பு வலிமை பெறவும், உடல் சோர்வை தடுக்கவும், இரும்புச்சத்து கூடுதலாக உடம்பில் சேரவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் பெறவும் எலுமிச்சைப் பழம் உதவுகிறது. இப்பழம் கூடுதலாக உடலில் உயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஆங்காங்கே சேரும் நச்சுத்தன்மைகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு பலதரப்பட்ட வழிகளில் எலுமிச்சைப் பழம் பயன் தந்தாலும், தினசரி உணவுகளில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான உணவு பொருளாகவும் உள்ளது.
lemon
ஆவிப் பறக்க இருக்கும் பொறித்த, அவித்த அல்லது வறுத்த உணவுகளில் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து ஊற்றுவதால், அவற்றின் சுவை பன்மடங்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது சைவ மற்றும் அசைவ உணவுகள் என இரண்டுக்கும் பொருந்தும். எனினும் சூடான உணவுகளின் மீது எலுமிச்சைச் சாற்றை பிழிந்து ஊற்றுவது தவறான உணவுப் பழக்கம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எலுமிச்சைச் சாற்றில் இருக்கும் நன்மைகள், சூடான உணவுகளில் பிழிந்துவிடும் போது சூட்டில் அழிந்துவிடும் என்கிற காரணத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். இதனால் எலுமிச்சைச் சாற்றை கலந்த உணவை சாப்பிடுவதில் எந்தவிதமான பயனுமில்லை.
அருகில் இருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும்? வழிமுறைகள் இதோ..!!
எலுமிச்சைப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் அஸ்கார்பிக் அமலிம் அதிகளவில் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் இதன்மூலமாகவே உடலில் சேருகின்றன. மேலும் இந்த சத்துகளுக்கு உணர்திறன் அதிகம். அதன்காரணமாகவே அதிக வெப்பம் அல்லது வெளிச்சம் ஆகிய இரண்டிலும், இச்சத்துக்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் சூடான உணவுகள் மட்டுமில்லாமல், தேநீர் மற்றும் சூடான தண்ணீரில் பிழிந்து விட்டாலும், பழத்தின் மூலம் கிடைக்க வேண்டிய வைட்டமின் மற்றும் நொதிகள் எதுவும் உடலுக்கு கிடைக்காது.
கட்டுப்பாடு இல்லாமல் தோன்றும் காம உணர்வுகள்- என்ன செய்யலாம்?
எலுமிச்சைப் பழத்தில் ஆண்டி அக்சிண்டன் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளன. இதுதான் சருமம், முடி உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு நல்ல பலனை தரக்கூடியதாக உள்ளன. இதையும் சூடான தண்ணீரில் சேர்க்கும் போது எந்தவித நன்மையும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.