அருகில் இருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும்? வழிமுறைகள் இதோ..!!
சமீப ஆண்டுகளாக இருதய நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது. அப்படி உயிரிழப்போரில் பெரும்பாலானோர் முதலுதவி கிடைக்காததன் காரணமாக மரணம் அடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது செய்யவேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
heart attack
உடல் உறுப்புகளில் பிரதானமானது இருதயம். நமது உடலின் ஆரோக்கிய செயல்பாட்டுக்கு இருதயத்தை நலமாக வைத்திருப்பது அவசியம். தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகநேரம் உட்கார்ந்தே இருப்பது மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை உள்ளிட்டவை விரைவில் இருதயத்தை பலவீனமடையச் செய்துவிடும். இவ்வாறு நேரும் போது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு, கொலஸ்ட்ரால், குடும்ப வரலாறு உள்ளிட்டவற்றை இருதய நோய் பாதிப்புக்கு காரணமாக் கூற முடியாது. உலக சுகாதார அமைப்பின் (WHO), உலகளவில் ஏற்படும் உலகளவில் அதிகம் பேர் இருதய நோய் பாதிப்பால் உயிரிழப்பதாக கூறியுள்ளது.
அதாவது ஓராண்டுக்கு 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய் பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். அதில் 5ல் 4 மரணங்கள் மாரடைப்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. எழுபது வயதுக்கு மேலானோருக்கு இருதய நோய் பாதிப்பு எளிதில் வந்துவிடதாக ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பு எவ்வாறு ஏற்படும்? அதற்கான அறிகுறிகள் என்ன? இதுகுறித்து வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு விரிவாக பார்க்கலாம்.
மாரடைப்பு எப்போது ஏற்படக்கூடும்?
மாரடைப்பு ஏற்படுவது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் அது எப்போது ஏற்படும் என்பது தான் தெரியாது. இருதயத்துக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் அடைபடும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயத்துக்கான ரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது, உடலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக மாரடைப்பு சம்பவக்கிறது.
மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன?
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர், மார்பின் இடது பக்கத்தில் நோயாளிகள் கூர்மையான வலியை அனுபவிக்கிறார்கள். நெஞ்சில் ஏதோ பாரமாக அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். வலி படிப்படியாக தோள்கள், கைகள், முதுகு, கழுத்து, கீழ் தாடை, பற்கள் என பரவும். குளிர்ந்த காலநிலையிலும் வியர்த்துக் கொட்டும். அறிகுறிகளில் சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், தலைச்சுற்றல், வேகமாக இருதயம் துடிப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்.
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
அருகில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்க்க வேண்டும். அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவரை கொண்டு செல்வது சரியான தேர்வாக இருக்கும். ஒருவேளை தாமதம் ஏற்பட்டால், நோயாளிக்கு ஆஸ்ப்ரின் மாத்திரையை வாயில் வைத்து மென்று விழுங்கச் சொல்லுங்கள். ஆஸ்ப்ரின் மாத்திரை ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதை தடுக்கிறது. நோயாளி மயக்கமடைந்தால், CPR (Cardio Pulmonary Resuscitation) செய்யுங்கள். இது எப்படி செய்ய வேண்டும் என்கிற வீடியோ யு- டிப்புகளில் உள்ளன. அதை பார்த்து கற்றுக்கொள்ளவும். சி.பி.ஆர் செய்ய கொஞ்சம் பயிற்சி இருந்தால் எளிதாக செய்துவிடலாம்.
சி.பி.ஆரை எப்படி செய்ய வேண்டும்?
ஒரு கையை மற்றொரு கைக்கு பின்னால் வைக்கவும். நோயாளி மார்பின் நடுவில் கீழ் கையின் அடிப்பகுதியை வைக்கவும். உங்கள் உடல் எடையை கையில் படும்படி வைத்திருங்கள். எனவே ஐந்து வரை அழுத்தி ஓரிரு வினாடிகள் நிறுத்திவிட்டு மீண்டும் அதே செயல்முறையை முயலுங்கள். நோயாளிக்கு செயற்கை சுவாசமும் தேவைப்படலாம். அப்போது உங்களுடைய வாயை நோயாளியின் வாயில் வைத்து மூச்சு கொடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வருவது நல்ல முதலுதவியாக அமையும்.
சி.பி.ஆர் கற்றுக்கொள்வது அவசியமாகிறது?
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு CPR நடைமுறை பற்றி எதுவும் தெரியாது. இதனால், மாரடைப்பு ஏற்படும் போது, அவசர நடவடிக்கை எடுக்க முடியாது மற்றும் மருத்துவரை நம்புவது தான் சரி என்று கருத்து கூறுவார்கள். இருதய நோயாளிகள் பலர், முதலுதவி கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். எனவே CPR கொடுப்பது பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது நல்லது.