Medicare Benefits of Spraying Vallar ...

வல்லாரைக் கீரை:

** கற்பக மூலிகைகளில் ஒன்றான இது வாய்ப்புண், அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.

** வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும்.

** வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்.

** வல்லாரை தோல் நோய்களுக்கு, குறிப்பாகத் தொழுநோய்க்கு நல்லது. தோல் நோய் தொந்தரவுகள் இருப்பவர்கள் தொடர்ந்து வல்லாரையை பயன்படுத்தி வந்தால் தோல்நோய் வெகு சீக்கிரத்தில் அகலும்.

** நினைவாற்றலை பெருக்கும் ஆற்றல் வல்லாரைக்கு அதிகம் உண்டு. எனவே இந்த வல்லாரை இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக நான்கைந்து இலைகளை பறித்து உண்ணலாம்.

** வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

** மறதி நோயைக் கண்டித்து நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை மாணவர்களுக்கு ஒரு அரிய மூலிகையாகும். மூளையைப் பலப்படுத்துவதில் மிகவும் சிறந்தது இது.