சவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திடீரென தோன்றும் பலவித நோய்களுக்கு சவ்வரிசி சிறந்த ஒரு நிவாரணியாக செயல்படுகிறது.

உணவில் ஊட்டச்சத்து

இந்திய பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் சவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும்.

உடலுக்கு குளிர்ச்சி

100 கிராம் சவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. அரிசியுடன் சவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக சவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடல் சுறுசுறுப்பு

சவ்வரிசியில் புரதம், வைட்டமிகள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள்.

சவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது.