Asianet News TamilAsianet News Tamil

ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துகள் மற்றும் அற்புத பயன்கள்…

Medical benefits of apple
Medical benefits of apple
Author
First Published Jun 3, 2017, 1:26 PM IST


 

ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சத்துக்கள்: 

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. 

பயன்கள்

ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது.

ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது.

சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. 

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும். 

வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். 

சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டலாம்.

ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios