Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

Massage for babies will get so much benefits ...
Massage for babies will get so much benefits ...
Author
First Published Sep 1, 2017, 1:25 PM IST


குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கு இல்லையென்றால் மன அழுத்தம் உருவாகும். மசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் சரியான வளர்ச்சிக்கும் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளில் தசை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக சிலக் குழந்தைகள் ஏதாவது ஒரு குறைபாடுடன் பிறக்கின்றன. எனவே மசாஜ் ஆஸ்துமா, சர்க்கரை நோய் அல்லது சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.

புற்று நோயால் அவதியுறும் குழந்தைகளுக்கும் உடம்பு மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனளிப்பதாக உள்ளது.

குழந்தைகளுக்கு மசாஜின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

– குழந்தைகளின் தீவிரப் போக்கு குறையும் – குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தவும் அவர்களுடைய தூக்க முறைகளை நெறிமுறைப்படுத்தவும் உதவுகிறது

– மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.

– உணர்ச்சிகளை மேம்படுத்தவும் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது

– உணவு உட்கொள்ளுதலை மேம்படுத்துகிறது

– குழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது

– உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது

– குழந்தைகள் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாக உணரவும் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. இந்தக் குழந்தைகள் சட்டென எதையும் புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் செய்வர்.

– அது குழந்தையை தாயுடன் ஒரு வாழ்நாள் பந்தத்தை கொள்ள உதவுகிறது. அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் புத்தி கூர்மை நிறைந்தவர்களாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பேறு காலத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்திற்கு சில தாய்மார்கள் உள்ளாவதுண்டு. இது பொதுவாக ஒரே மாதிரியான செயல்களை செய்துகொண்டு ஒரே அறையில் முடங்கி கிடைப்பதால் இருக்கலாம்.

- குழந்தைக்கு 15-20 நாட்கள் ஆனவுடனேயே மசாஜ் செய்யத் தொடங்கிவிடுங்கள். மசாஜ் செய்தபின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் உங்கள் குழந்தையை ஆசுவாசப்படுத்தவும் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.

மசாஜ் செய்வது குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதுடன் குழந்தை தன் தாயிடம் அன்பான நம்பிக்கையான உணர்வை அனுபவிக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios