Asianet News TamilAsianet News Tamil

நன்மைகள் பல தரும் தக்காளியால் இவ்வளவு சிக்கல்களும் வரும்...

Many of the benefits are due to the problems of tomatoes ...
Many of the benefits are due to the problems of tomatoes ...
Author
First Published Apr 3, 2018, 1:24 PM IST


நன்மைகள் பல தரும் தக்காளியால் இவ்வளவு சிக்கல்களும் வரும்...

** தக்காளியில் அதிக அளவு அமிலத் தன்மை இருப்பதால், நமது உடலின் உணவுக்குழலைப் பாதித்து, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.

** பைத்தோகெமிக்கலான ஐசோபீன்கள் மற்றும் லைகோபீன் தக்காளியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்ற தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடும் செயல் திறனைக் குறைக்கிறது.

** தக்காளியில் இருக்கும் ஐசோபீன்கள் ஆண்களின் புரோஸ்டேட் என்னும் சுரப்பியை பாதித்து சிறுநீர் தொடர்பான புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

** தக்காளி மற்றும் அதன் விதைகளில் கால்சியம், ஆக்சலேட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இது நமது உடலில் உள்ள சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது.

** தக்காளியில் இருக்கும் லைகோபீன் காரணமாக குடல் நோய் கோளாறுகள் மற்றும் எரிச்சல், வலி போன்ற குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது.

** தக்காளி ஒருசிலருக்கு ஒவ்வாமையாக இருந்து அதை சாப்பிடும் போது, அவர்களுக்கு தோல்கள் மீது எரிச்சல், தடித்தல், படைகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற தோல் சம்பந்தமான பல பிரச்சனைகள் வருகின்றது.

** தக்காளியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது எனவே இதை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால், குமட்டல், வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகள், கண்கள் மற்றும் உதடுகள் பாதிப்பு, உடல் வீக்கம் போன்ற பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios