நடைப்பயிற்சி: ஆரோக்கிய ரகசியம்?
நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்களுக்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. தினசரி நடைப்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வேக நடைப்பயிற்சியை விட மெதுவான நடைப்பயிற்சி அதிக நன்மைகளைத் தரும்.

தற்போது உள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் பலரும் நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று மருத்துவர்களிடம் கேட்டால், அதிகப்படியாக துரித உணவுகளை எடுத்துக் கொள்வது, அதாவது கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடல் உழைப்பு இல்லாத இருப்பதும் தான் காரணம் என்று கூறுகின்றனர். இதற்கு தீர்வாக தினமும் நடைப்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு மட்டுமின்றி மனநலனையும் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினசரி நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
- தினமும் நடைப்பயிற்சி செய்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்.
- உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவும்.
- தினசரி நடைப்பயிற்சி இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும். இதனால் நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.
- மூட்டுகளில் ரத்த சுழற்சி அதிகரிக்கும். இதனால் மூட்டு வலி உள்ளவர்களுக்கு மூட்டு வலி குறையும்.
- ஆஸ்தியோபோரோசிஸ் மற்றும் கீழ் வாதம் போன்ற நோய்களை தவிர்க்க முடியும்.
- தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் மூளையில் உள்ள எண்டோர்பின்கள் சுரந்து மனதை மகிழ்ச்சியாக மாற்றும். மனதில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எண்டோர்பின்கள் என்பவை மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றை குறைக்கும் ஹார்மோன்கள் ஆகும். இவற்றை மகிழ்ச்சி ஹார்மோன்கள் என்றும் அழைப்பர்.
- தினமும் நடைப்பயிற்சி செய்வதால் சீரான தூக்கமும் ஏற்படும். குறிப்பாக தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நடைப்பயிற்சி மிகுந்த உதவிகரமாக இருக்கும்.
- தினசரி நடைப்பயிற்சி மூளையின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். மேலும் நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும்.
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பலருக்கும் எப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது சந்தேகமாகவே உள்ளது. அதாவது வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது அதிக பலன்களை தருமா? அல்லது மெதுவாக அதிக தூரம் நடப்பது அதிக பலன்களை தருமா? என குழம்புகின்றனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்ட நேரம் மெதுவாக நடப்பது, குறுகிய நேரம் அதிக வேகத்தில் நடப்பதை விட அதிக கலோரி எரிக்க உதவும் என தெரிய வந்துள்ளது.
1. வேகம் மற்றும் தீவிரம்:
30 நிமிட நடை: 30 நிமிடங்களில் 5000 அடிகள் நடக்க வேண்டுமென்றால், அதிக வேகமாக செல்ல வேண்டும். ஆனால் சிறிது நேரத்தோடு முடிவடைவதால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கும் நிலைக்கு சென்றுவிட முடியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
1 மணி நேர நடை: 5000 அடிகளை 1 மணி நேரத்தில் நடப்பது மெதுவான வேகத்தில் நடக்கிறது. குறைந்த வேகம் என்றாலும், நீண்ட நேரம் நடப்பதால், உடல் கொழுப்பு எரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
2. சரியான எரிசக்தி பயன்படுத்தும் முறை:
அதிக வேக நடை (30 நிமிடங்கள்): கலோரிகளை எரிக்கும். ஆனால் நீண்ட நேரத்திற்கு கொழுப்பை எரிக்காது.
மெதுவான நடை (1 மணி நேரம்): மெதுவாக நீண்ட நேரம் நடப்பது, உடலில் உள்ள பெரும்பான்மையான கொழுப்பை எரிக்க உதவும்.
3. பயிற்சிக்கு பின் எரிசக்தி (EPOC):
1 மணி நேரம் மிதமான வேகத்தில் நடப்பது, உங்கள் உடல் நிலையை aerobic system என்ற நிலைக்கு கொண்டு செல்லும். Aerobic System என்பது உடலுக்கு சக்தியை உருவாக்கும் முறையாகும். இது ஆக்சிஜன் அடிப்படையில் செயல்படுகிறது. 1 மணி நேரம் மிதமான வேகத்தில் நடப்பது, நடைப்பயிற்சி முடிந்த பின்பும் கூட கலோரிகளை தொடர்ந்து எரிக்கும்.
30 நிமிடங்களில் மேற்கொள்ளும் அதிக தீவிர பயிற்சி, வேகமாக திரும்பவும் சாதாரண நிலைக்கு வரும். எனவே நீண்ட நேரத்துக்கான கலோரி எரிப்பு குறைவாக இருக்கும்.