நமது உடலுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய சத்துக்களை அள்ளி கொடுக்கும் இயற்கை உணவுப் பொருள்களில் ஒன்று "பூண்டு".

இந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் அப்படி உள்ள பூண்டு சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? 

1.. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுடைய உணவில் பூண்டை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது கல்லீரல் பாதிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்தின் வீரியத்தைக் குறைக்கிறது. 

2.. வயிறு மற்றும் கண் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், தங்களின் உணவில் பூண்டை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நமது கண் மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்தைக் குறைக்கிறது. 

3.. குழந்தை பெற்ற பின் தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கின் போது, பூண்டை சாப்பிடக் கூடாது. ஏனெனில் பூண்டானது, மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்கிறது. 

4.. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள், அதை செய்வதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் பூண்டு நமது உடம்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அறுவை சிகிச்சையின் போது ரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்யும். 

5.. உடல் நலக் குறைவின் போது, எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை சாப்பிடும் போது, உணவில் பூண்டு சேர்த்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அது நாம் சாப்பிடும் மருந்தின் வீரியத்தைக் குறைக்கும்.