Asianet News TamilAsianet News Tamil

நாராயண மூர்த்தி கூறியது போல் வாரத்தில் 70 மணி நேரம் பாதுகாப்பாக வேலை செய்ய முடியுமா? நிபுணர்கள் பதில்..

இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியது போல் வாரத்தில் 70 மணி நேரம் பாதுகாப்பாக வேலை செய்ய முடியுமா? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Is it safe to work 70 hours a week as Narayana Murthy said? Experts answer.. Rya
Author
First Published Oct 31, 2023, 8:42 AM IST | Last Updated Oct 31, 2023, 8:42 AM IST

இன்ஃபோசிஸ் நிறுவனரும், பெரும் பணக்காரர்களில் ஒருவருமான என்ஆர் நாராயண மூர்த்தி சமீபத்தில் இந்தியாவின் பணிக் கலாச்சாரத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளன. சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற உலகில் சிறப்பாக வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்துக்களே இந்த சர்ச்சைக்கு காரணம். அவரின் இந்த கருத்துக்கு பல முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் தொடங்கி மருத்துவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாராயண மூர்த்தி கூறியது போல் வாரத்தில் 70 மணி நேரம் பாதுகாப்பாக வேலை செய்ய முடியுமா? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்..மும்பையில் உள்ள சர் ஹெச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் பிபீன்சந்திர பாம்ரே இதுகுறித்து பேசிய போது "ஒரு இருதயநோய் நிபுணராக, வாரத்தின் 70 நாள் வேலை குறித்த மூர்த்தியின் கருத்தை நான் சிந்திக்கிறேன். நம்மில் மிகவும் பிஸியாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணிநேரம் வரை வேலை செய்கிறோம்.எனினும், நமது தொழில் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. 

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையில் வேலை செய்தால், வாரத்தில் 70 மணிநேர வேலை போன்ற அதிக நேரம் வேலை செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தாது, ஆனால் நீங்கள் மன அழுத்த சூழலில் பணிபுரிந்தால் சோர்வு ஏற்படலாம். என் கருத்து , வேலை நேரத்தை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் சோர்வைத் தடுப்பதற்கான ஆதரவு அமைப்புகளை வழங்குதல் மற்றும் திறமையான மற்றும் திறமையற்ற வல்லுநர்கள் இருவரும் அந்தந்த துறைகளில் சிறந்த முடிவுகளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள சக்ரா வேர்ல்ட் மருத்துவமனையின் மருத்துவ உளவியல் நிபுணர் ஷில்பி சரஸ்வத், "இப்போது 25-48 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அடிப்படை மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனநலப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களின் வேலை-வாழ்க்கை ஏற்றத்தாழ்வு, எல்லைகள் இல்லாமை மற்றும் நீண்ட வேலை நேரங்கள் ஆகியவை பெரிய உடல்நலக் கவலைகளைப் பாதிக்கின்றன. பதட்டம், மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிப்பது மிகவும் பொதுவானது, பலர் அறிகுறியற்றவர்களாகவும், ஆரம்ப நிலையிலேயே இருதயப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள் ." என்று தெரிவித்தார்.

மேலும், "பொதுவாக அவர்களுக்கு மோசமான மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் குறைவு. நீண்ட வேலை நேரம் அழுத்தம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மிகவும் பொதுவான கோளாறுகள் GAD (பொதுவான கவலைக் கோளாறு), நோய் கவலைக் கோளாறு, பீதி நோய், பயம் போன்றவை. மற்றும் தாக்கத்தை தருகிறது. அதிக நேரம் வேலை செய்வது மோசமான ஆதரவு வசதிகள் மற்றும் பணி வாழ்க்கை சமநிலை இல்லாததால் அதிகரிக்கும் மன அழுத்தத்தின் காரணமாக உடல்நலக் கவலை நிச்சயமாக அதிகரிக்கிறது. இது குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். மன அழுத்தத்தை குறைக்க மனநல நிபுணர் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்.

 

புகைபிடித்தல், நீண்ட நேரம் வேலை செய்வதால் இந்த ஆபத்தான நோய் ஏற்படுகிறது: நிபுணர்கள் எச்சரிக்கை..

மன அழுத்தத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • வேலைக்கு நடுவே குறுகிய இடைவெளி எடுப்பது
  • மன ரீதியாக ரிலாக்ஸாக உணர்வது
  • மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்
  • பணியிட நெகிழ்வுத்தன்மை 
  • பணியிடத்தில் எல்லைகளை அமைக்கவும்
  • நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும்
  • உங்கள் உணர்வுகளை ஒப்புக்கொள்ளுங்கள்
  • உடல் உழைப்பு
  • ஆரோக்கியமான உணவு
  • ஆரோக்கியமான சமூக ஆதரவு
  • ஆரோக்கியத்திற்கான முன்னுரிமைகளை அமைத்தல்
  • உங்கள் பிரச்சனை அல்ல உங்களை மேம்படுத்த மன ஆரோக்கியத்திற்கான உதவியை நாடுங்கள்.
  • உங்கள் நேரத்தை ஆராயுங்கள்
  • எளிய அடிப்படை வழக்கத்தைப் பின்பற்றவும்
  • யதார்த்தமான குறுகிய கால இலக்குகளை அமைக்கவும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios