Is it good to put on a hot summer? Bad? Heres the shock report ..

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சரகர் என்பவர் எழுதிய ‘சரக சம்ஹிதை’ என்னும் ஆயுர்வேத நூலில் மொட்டை அடிப்பதை ஒரு ஆரோக்கிய நடைமுறை என்று கூறியுள்ளார். குறிப்பாக, பிறப்பு முதல் இறப்பு வரை பின்பற்ற வேண்டிய 16 கருமங்களில் முண்டன கருமம், சூடன கருமம் போன்றவற்றில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஸ்ருதா என்பவர் எழுதிய ‘சுஸ்ருத சம்ஹிதை’ என்ற மருத்துவ நூலில், இரத்தக் குழாய்களின் முடிவு, பல உணர்ச்சி மர்மங்கள் தலைப் பகுதியின் உச்சியில் உள்ளன.

மொட்டை அடித்துக் கொள்ளும்போது அவை தூண்டப்படுகின்றன. இதனால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, புத்துணர்வு, மன வலிமை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

நம் முன்னோர் தம் அனுபவத்தில் உணர்ந்த சிலவற்றைச் சடங்குகளாக நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். அந்த வகையில், இதுவும் கலாச்சாரச் சடங்குகளில் ஒன்றுதான்.

உதாரணமாக, வீட்டில் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளிலும் மொட்டை அடிப்பது நமது கலாசாரமாக இருந்து வந்துள்ளது. மொட்டை அடிப்பதால் மன வலிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், இவ்வாறு பின்பற்றி வந்திருக்கலாம். அதேபோல, ஞானிகள் மொட்டை அடித்துக் கொள்வதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இப்படி ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும் மொட்டை அடிப்பதால் என்னென்ன மருத்துவப் பலன் இருக்கிறது?

பொதுவாக, பிறந்த ஒரு வருடத்துக்குள்ளும், அதற்குப் பின், சில வருட இடைவெளியிலும் மொட்டை அடித்துக் கொள்வது நல்லதே. அதேநேரத்தில் மொட்டை அடித்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை.

குறிப்பாக கோடை காலங்களில் தலையில் அதிகம் வியர்வை வெளியாகும். இதனால் தலைப்பகுதியில் அழுக்கு அதிகம் சேரும். மேலும் தலையில் அரிப்பு, பொடுகு ஏற்படுவதோடு சொரியாசிஸ், தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள் மொட்டை அடிப்பதும் ஒரு வகையில் தீர்வாக அமையும்.

மற்றபடி, இரண்டுவேளை நன்றாக தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருந்தால்கூட போதும். மேலும், பணிச்சூழலால் மொட்டை போட்டுக் கொள்ள முடியாதவர்கள் வழக்கமாக வளர்க்கும் முடியின் அளவைவிட வெயில் காலங்களில் முடியை குறைத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். இதற்காக குடை, தொப்பி போன்றவற்றை வெயிலில் செல்லும்போது பயன்படுத்தலாம்.