நாம் உண்ட உணவு செரிக்காமல் இருப்பதைதான் அஜீரணம் என்கிறோம். அஜீரணம் ஏற்பட்டுவிட்டால் போதும் எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது. சில சமயங்களில் ஏன்டா சாப்பிட்டோம் என்று கூட நினைக்க வைத்த்துவிடும். அந்த அஜீரணத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அஜீரணத்தில் அறிகுறிகள்

1.. வயிறு உப்பசம்

2. புளி ஏப்பம்

3. வாய் துர்நாற்றம்

4. பசி இன்மை

5. அடிக்கடி கொட்டாவி

6. நெஞ்சுக் கரிப்பு

7. மலச்சிக்கல்

8. வாயிற்று வலி

9. குமட்டல், வாந்தி

அஜீரணம் ஏன் வருகிறது

1.. நாம் உணவை அதிக அளவில் உண்பது

2.. உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் விழுங்குவது

3. போதிய அளவு நீர் அருந்தாமை

4. சாப்பிட்ட உடன் அதிக நீர் அருந்துவது.

5. சரியான தூக்கம் இல்லாமை

6. மாமிச உணவுகளை அதிகம் உண்ணுதல்

அஜீரணத்தை தீர்க்க:

1.. கொய்யாப்பழம் 250 கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்

2.. எலுமிச்சை சாறு மிகவும் பயன் தரும், இதனுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் கலந்து அருந்தலாம்.

3.. சுடு தண்ணீர் ஒத்தடம் வயிற்றின் மீது கொடுத்தாலும் அஜீரண கோளாறு நீங்கும்.

4.. சாப்பிட்ட உடன் அரை குவளைக்கு மிகாமல் சுடு தண்ணீர் அருந்துவது நல்லது.

5.. பப்பாளி பழத்தை காலை உணவாக தொடர்ந்து 20 நாட்களுக்கு உண்டுவந்தால் இந்த அஜீரணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.