பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தலாம். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். 

தேனில் ஊறவைத்த பூண்டு தயாரிக்க தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட பூண்டு 20-ஐ எடுத்து கொள்ளவும்.  தூய்மையான தேன் ஓர் பாட்டில் அளவு எடுத்துகொண்டு பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு அதில் ஊற வைக்கவும். பூண்டை தேனில் ஒரு வாரம் ஊறவிடுங்கள். 

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதும். இப்படி ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

இந்த தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது. 

உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.