Walking: காலையில் வெறுங்காலில் நடந்தால் கிடைக்கும் அளவில்லாத அற்புத பலன்கள்!
அதிகாலையில் எழுந்ததும் புல் தரையில், வெறுங்காலுடன் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர்.
வேகமாக நகரும் இன்றைய காலகட்டத்தில் செருப்பு மற்றும் ஷூ இல்லாமல் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக செருப்பு இல்லாமல் வெறுங்காலுடன் நடக்கும் முறையே தற்போது இல்லாமல் போய் விட்டது. ஆனால், வெறுங்காலில் நடப்பதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. தினந்தோறும் அதிகாலையில் எழுந்ததும் புல் தரையில், வெறுங்காலுடன் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர்.
வெறுங்காலுடன் நடத்தல்
அதிகாலையில் எழுந்தவுடன் பச்சைப் புல் தரையில், வெறுங்காலுடன் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியத்திற்கு அளவில்லாத நன்மைகளை அளிக்கும். ஆனால், இந்தப் பழக்கம் தற்போது முற்றிலும் குறைந்து விட்டது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கூட செருப்பு அல்லது ஷூ போட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள். வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொண்டால், பலரும் இதனை முயற்சி செய்வார்கள்.
வெறுங்காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அதிகாலையில் எழுந்தவுடன், புல் தரையில் வெறுங்காலுடன் நடப்பது உள்ளங்கால்களில் அழுத்தத்தை கொடுக்கும். உடலில் உள்ள பல பாகங்களின் அழுத்தம், நமது உள்ளங்கால்களில் இருக்கிறது. கண்களின் அழுத்தமும் இதில் அடங்கும். மிகச் சரியான புள்ளியில் அழுத்தம் இருந்தால், நம்முடைய கண்பார்வையின் கூர்மை நிச்சயமாக அதிகரிக்க கூடும்.
Swimming: 30 நிமிட நீச்சல் பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்!
காலையில் பனி நிறைந்த புல் தரையின் மீது நடப்பது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இது இயற்கையாகவே நம் உடலுக்கு சிகிச்சை அளிக்கிறது. இது, பாதத்தின் கீழ் இருக்கும் மென்மையான செல்களுடன் தொடர்பு கொண்டுள்ள நரம்புகளை தூண்டுவதால், இது மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. இதனால் ஒவ்வாமையைத் தீர்த்து, இது போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
இரு கால்களையும், ஈரம் நிறைந்த புல் தரையில் வைத்து சிறிது நேரம் நடக்க வேண்டும். இப்படி நடப்பதால், ஒரு சிறந்த கால் மசாஜ் நமது இரு கால்களுக்கும் கிடைக்கும். இத்தகைய சூழ்லில், கால்களின் தசைகள் நிறைய தளர்வு பெறுகின்றன. இதன் காரணமாக கால் வலி அனைத்தும் நீங்கி நிவாராணம் கிடைக்கிறது.
காலையில் புல் தரையின் மீது வெறுங்காலுடன் நடந்தால், நமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இது மன அழுத்தத்தை குறைத்து, நம் மனதை ரிலாக்ஸ் செய்து பதற்றத்தையும் போக்குகிறது.மேலும், நிம்மதியான உணர்வையும் தருகிறது.