Asianet News TamilAsianet News Tamil

தீராத பல் வலியையும் குணப்படுத்தலாம் இந்த வழிகளை நீங்கள் பயன்படுத்தினால்...

If you use these ways you can cure toothache
If you use these ways you can cure toothache
Author
First Published Mar 17, 2018, 1:03 PM IST


தீராத பல் வலியை குணப்படுத்தும் வழிகள் இதோ...

** ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும்.

** பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.

** கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

** வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால், தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.

** நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.

** பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.

** தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios