Lemon Peel: இது தெரிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டிங்க: அவ்ளோ பலன்கள் இருக்கு!
பழத்தோல்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அவ்வகையில், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பங்கு அளப்பரியது. பொதுவாக நாம் பழங்களை சாப்பிட்ட பிறகு, பழத்தோல்களை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், நாம் குப்பையில் தூக்கி எறியும் பழத்தோல்களில் பல்வேறு அற்புத பலன்கள் கொட்டிக் கிடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். பழத்தோல்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அவ்வகையில், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை மட்டுமின்றி அதனுடைய தோலும், உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. எலுமிச்சை ஒரு அதிசயம் நிறைந்த கனியாகும். நம்மில் பலரும் எலுமிச்சையை பயன்படுத்திய பிறகு, அதனுடைய தோலை தூக்கி எறிந்து விடுவோம். நாம் தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
மன அழுத்தத்தை குறைக்கும்
எலுமிச்சை தோலில் டி-லிமோனீன் என்ற தனிமம் உள்ளது. இது கொழுப்பை குறைப்பதற்கு உதவி செய்கிறது. அதோடு, நச்சுக்களை அகற்றுகிறது. எலுமிச்சை தோல்களில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகிறது. இவை மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள், எலுமிச்சை தோல்களை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நச்சுக்களை வெளியேற்றும்
உடலில் கொழுப்புகள் அதிகரிக்கையில், இதன் காரணமாக நச்சுக்களும் உடலில் அதிகரிக்கும். எலுமிச்சை பழத்தோலை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் ஆரோக்கியமாவதோடு உடல் எடையும் வெகுவாக குறைகிறது.
Liver Fat: கல்லீரல் கொழுப்பை கரைக்கும் சில இயற்கை வழிமுறைகள் இதோ!
கொழுப்பை எரிக்கும்
எலுமிச்சை பழத்தோலில் இருக்கும் வைட்டமின் சி, கொழுப்பை எரிக்க உதவி செய்கிறது.
எலுமிச்சை தோல் கலந்த வெந்நீர்
எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து, சுமார் 2 லிட்டர் தண்ணீரில், 30 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரை வடிகட்டி, ஆற வைத்து குடிக்கலாம் என கூறப்படுகிறது. தினந்தோறும் காலையில் எலுமிச்சை தோல் கலந்த வெந்நீரை குடித்து வந்தால், உடல் எடை கணிசமாக குறையும். மேலும் மலச்சிக்கல், செரிமாண கோளாறு மற்றும் வாய்வுக் கோளாறு என பல்வேறு உடல் உபாதைகளும் வரவே வராதாம்.