உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. 

கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். 

மாறாக அரை வேக்காடு நிலையில் அதாவது அரை குறையாக வேகாமல் சமைத்து சாப்பிட்டால் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்படும். அதாவது "பக்கவாதம் நோய்" ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா உருவாகிறது.

அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. 

இது தீவிரம் அடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படும். 


இந்தத் தகவலை அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு தெரிவித்துள்ளார்.