Asianet News TamilAsianet News Tamil

இப்படி செய்தால் காஃபியைக் கொண்டு தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

If you do this you can reduce the capsule with caffeine
If you do this you can reduce the capsule with caffeine.
Author
First Published Mar 7, 2018, 2:04 PM IST


பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது தான் காஃபி. காலையில் எழுந்ததும் காஃபி குடித்தால் தான், மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று இருப்போர் ஏராளம்.

 

காஃபி ஒருவரது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும். காஃபி பிரியரான உங்களுக்கு தொப்பை இருந்தால், அந்த காஃபியைக் கொண்டே தொப்பையை எளிதில் குறைக்கலாம். அதற்கு காஃபியுடன் இந்த பொருட்களை சேர்த்துக் குடித்தால் மட்டும் போதும்.

 

இதனால், தொப்பை குறைவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் இதயமும் பாதுகாப்புடன் இருக்கும்.

 

தொப்பையைக் குறைக்க காஃபியுடன் எதை சேர்க்க வேண்டும்?

 

** பட்டை:

 

பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. முக்கியமாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைக் குறைக்கும் பண்புகள் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக பட்டை உடலில் உள்ள சர்க்கரையை உடைத்து ஆற்றலாக்கி, கொழுப்புக்களாக படிவதைத் தடுக்கும்.

 

** தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெயும் தொப்பையைக் குறைக்க உதவும். அதுவும் தேங்காய் எண்ணெய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

 

** தேன்:

 

தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

தேன் – 1/2 கப்

 

தேங்காய் எண்ணெய் -3/4 கப்

 

பட்டை தூள் – 1 ஸ்பூன்

 

காஃபி பொடி – 1 ஸ்பூன்

 

தயாரிக்கும் முறை:

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அதனை காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் போட்டு, தேவையான பொழுது பயன்படுத்த வேண்டும்.

 

பயன்படுத்தும் முறை:

 

தினமும் காஃபி குடிக்கும் போது, தயாரித்து வைத்துள்ளதை ஒரு ஸ்பூன் எடுத்து காஃபியுடன் சேர்த்து நன்கு கலந்து, பின் குடிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios