தற்போதைய காலத்தில் வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரையும் தாக்குகின்றது புற்றுநோய். குறிப்பாக மார்பக மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்...

** சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கலந்து வெளியேறினால், அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான முதல் அறிகுறிகளில் ஒன்றாகும்.

** சிறுநீர் பாதை தொற்றுகளுக்களான, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல், வலி அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வுகள் சிறுநீர்ப்பை புற்றுநோயிக்கான அறிகுறியாகும்.

** சிலருக்கு சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டு, ஆனால் சிறுநீர் வராமல் இருந்தாலும், அது சிறுநீர்ப்பை புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

** ஒருவரின் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி, அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தாலோ அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

** பசியின்மை, எடைக் குறைவு மற்றும் மிகுதியான சோர்வு இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் கூட, அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஏனெனில் இதற்கு, நமது உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.