தொப்பையை குறைக்க இந்த ஆசனத்தை ட்ரை செய்து பாருங்கள்! பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்!

பாலாசனம் செய்வதால் தொப்பை குறைவதோடல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தருகிற்து. இந்த பாலாசனத்தை எப்படி செய்வது?அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 

How to do Balasanam and Benefits of Balasanam

மனதை அமைதிப்படுத்தவும், உடலை வலுவாக வைத்துக் கொள்ளவும் யோகாசனங்கள் பெரிதும் உதவுகின்றன.
யோகாசனத்தில் பல விதங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பாலாசனம் என்ற ஆசனத்தை கான் உள்ளோம்.

இந்த ஆசனமானது குழந்தை போன்ற நிலையில் காணப்படுவதால் பாலாசனம் என்று கூறப்படுகிறது. இந்த ஆசனத்தை மிக எளிமையாக செய்யலாம். இதனை செய்யும் போது கணுக்கால், தொடை, முழங்கால்கள் மற்றும் இடுப்பு ஆகியவை ஸ்ட்ரெட்ச் ஆகும். இந்த ஆசனத்தை செய்வதால் உடலுக்கு நல்லதொரு ஓய்வு கிடைக்கும். தவிர இந்த பாலாசனத்தை செய்யும் போது முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து முதலிய பகுதிகள் பலப்படுத்துபடுகின்றன.

குறிப்பாக இந்த ஆசனத்தை செய்வதால் வயிற்றுப் பகுதி க்கு நன்றாக அழுத்தம் கொடுக்கப்படும். இந்த அழுத்தத்தினால் வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைக்க முடிகிறது. வயிற்று சுற்றி இருக்கும் கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் இதனை தினமும் செய்து வந்தால் தொப்பை பிரச்சனை விரைவில் குறைவதை நீங்கள் உணரலாம்.

பாலாசனம் செய்வதால் தொப்பை குறைவதோடல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தருகிற்து. இந்த பாலாசனத்தை எப்படி செய்வது?அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பாலாசனம் செய்வது எப்படி:

முதலில் தரையில் 2 கால்களையும் பின் புறமாக மடக்கி பிட்டத்தின் மீது அமர வேண்டும். அப்படி அமரும் போது கால்களின் பெருவிரல்கள் 2 ஒன்றன் மீது ஒன்று இணையுமாறு செய்து கொள்ள வேண்டும்.

இப்போது மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு 2 கைகளையும் தலைக்கு மேல் மெதுவாக தூக்க வேண்டும். அடுத்ததாக மூச்சை வெளி விட்டுக் கொண்டே முன் புறமாக மெதுவாக குனிய வேண்டும். இப்போது நெற்றி தரையைத் தொட வேண்டும் அதே நேரத்தில் பிட்டத்தை தூக்கக் கூடாது.

இதே நிலையில் தொடர்ந்து 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சுவாசித்துக் கொண்டே இருத்தல் வேண்டும். பிறகு பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இதனை குறைந்தது 5 முதல் 10 முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் :

இந்த ஆசனம் உடலின் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அடிவயிறு மற்றும் மார்பு ஆகிய பகுதிகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனை காலையில் செய்யும் போது அன்றைய தினம் முழுதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இதனை தினமும் செய்யும் போது செரிமானத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கலை சரி செய்கிறது. அதோடு உடல் மற்றும் மனம் ஆகியவற்றை அமைதியாக வைத்துக் கொள்கிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் அடைவதை குறைக்கிறது.

யார் இந்த பாலாசனத்தை செய்யக் கூடாது:

இந்த பாலாசனம் பார்க்க சுலபமாக இருந்தாலும் ஆசனத்தை செய்யும் போது எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்.

கடுமையான மூட்டு / முதுகு வலி உள்ளவர்கள் இந்த பாலாசனத்தை செய்யக்கூடாது.

இதனை எப்போதும் காலை நேரத்தில் அதுவும் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும்.

இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. அதே போன்று வயிற்றுப்போக்கு இருக்கும் போது இதனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

சித்திரை மாத ராசி பலன் 2023: சூரிய குபேர யோகத்தால் செல்வ செழிப்புடன் இருக்க போகும் 4 ராசிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios