Asianet News TamilAsianet News Tamil

முழுவதுமாக கொட்டிவிட்ட பிறகும் தலைமுடி தாராளமாய் வளர இதோ சில சூப்பர் டிப்ஸ்...

Here are some of the best tips to grow your hair thoroughly.
Here are some of the best tips to grow your hair thoroughly.
Author
First Published Apr 14, 2018, 12:59 PM IST


1... சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.

6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .

8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.

9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.

10. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத் தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios