Here are some medicinal properties contained in coconut and pumpkin ...

நல்லெண்ணெய்

எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது. 

மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. 

ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கவும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.

நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். 

கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும். 

உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

பூண்டு

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. 

வியற்வையை பெருக்கும்.

உடற்சக்தியை அதிகப்படுத்தும்.

தாய்பாலை விருத்தி செய்யும்.

 சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்.

சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும். 

உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். 

இதய அடைப்பை நீக்கும். 

நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். 

ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு. 

வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை நீக்கும்.

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. 

நாள்தோறும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.