குளிர்காலங்களில் வெந்நீர் குடிக்கும் போது கவனமாக இருங்கள்..!!
குளிர்காலத்தில் நாள் முழுவதும் 2-3 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து அருந்தினால், உடலில் வைட்டமின் சி அதிகரிக்கும்.
வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் செரிமானம், எடை குறைப்பு மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட பிரச்னைகள் எதுவும் நம்மை அண்டாது. பலர் இதை மருந்தாக நினைத்து அதிகாலையில் குடிக்கின்றனர். ஒருசிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டி, சில துளிகள் எலுமிச்சை சாற்றை அதில் சேர்த்து பருகுகின்றனர். மற்றவர்கள் எடையைக் குறைக்கவும், வேகமாக தூங்கவும் தேனுடன் சேர்த்து சுடு தண்ணீரை குடிக்கின்றனர். இருப்பினும், நாள் முழுவதும் சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதுதொடர்பான விபரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மன அழுத்தம்
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், உங்களுக்கு மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் இருந்தால் விரைவில் குணமாகும். தினமும் வெந்நீர் குடிப்பவர்களுக்கு இது மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவாக உங்களுக்கு மனக்கவலை குறைவது போன்ற உணர்வு தோன்றும். ஒரு ஆய்வின்படி, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், குறைந்த அளவு அமைதி மற்றும் இனிமையான உணர்வுகள் ஏற்படும். உடலில் இருக்கும் நீர்ச்சத்து மனநிலை மேம்படுத்துகிறது மற்றும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.
நடுக்கம்
குளிர்ந்த காலநிலைக்கு நமது உடலின் இயல்பான எதிர்வினை தான் நடுக்கம். அப்படிப்பட்ட சூழலில் சூடான தண்ணீர் குடிக்கும் போது நடுக்கம் குறைந்துவிடுகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஆய்வில், குளிர்ந்த வெப்பநிலையின் போது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை சராசரி அளவுக்கு பராமரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
செரிமானம்
விருந்துக்குப் பிறகு செரிமான அமைப்பைத் தூண்டுவதற்கு, வெதுவெதுப்பான நீரை பருகுவது நல்ல பலனை தருகிறது. வெதுவெதுப்பான நீர் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாயுவைக் குறைக்கிறது. இது முக்கிய ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் நாம் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க சூடான நீர் உதவுகிறது.
உடல் துர்நாற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- இந்த பாதிப்பாக இருக்கலாம்..!!
சிக்கல்
இந்த வார்த்தை உங்களுக்கு சிக்கலாக தோன்றலாம். ஆனால் இந்த பிரச்னையை விளக்குவதற்கு இதுதான் சரியான வார்த்தையாக கருதப்படுகிறது. நமது உடலில் பல்வேறு செயல்பாடுகள் தூண்டப்படும் போது அல்லது மிகவும் உடல் உழைப்புக் கொண்டு உழைக்கும் போது நாம் சோர்ந்துவிடுவோம். ஒருசிலருக்கு தலைவலி ஏற்படும். அந்த நேரத்தில் நிவாரணம் கிடைக்க வேண்டி, வெந்நீர் அருந்தலாம். சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருந்தாலும் கூட உடனடி தீர்வு கிடைக்கிறது.
மலச்சிக்கல்
உடலில் நீரிழப்பு ஏற்படும் போது வரக்கூடிய பாதிப்பு தான் மலச்சிக்கல். அந்த பிரச்னையை குறைப்பதற்கும் வெந்நீர் பருவதை தினசரி பழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது மற்றும் மலத்தை மென்மையாக்குகிறது. எனவே, மலச்சிக்கலைத் தடுக்க நிறைய தண்ணீர் மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம் தான்.