Asianet News TamilAsianet News Tamil

தலைவலி தீர அட்டகாசமான  பத்து பாட்டி வைத்திய டிப்ஸ்...

Headaches to your favorite ten grandmother medical tips ...
Headaches to your favorite ten grandmother medical tips ...
Author
First Published Apr 17, 2018, 12:51 PM IST


தலைவலி தீர அட்டகாசமான பத்து பாட்டி வைத்திய டிப்ஸ்...

1.. கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

2.. வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

3.. கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

4.. கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

5.. ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

6.. இரண்டு மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

7.. கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த‌லைவ‌லி குறையும்.

8.. முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

9.. புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

10.. டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

Follow Us:
Download App:
  • android
  • ios