Asianet News TamilAsianet News Tamil

அன்னாசி பழத்தில் இப்படி மருத்துவ பயன் இருக்குனு நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

Have you heard that the pineapple fruit is such a medication?
Have you heard that the pineapple fruit is such a medication?
Author
First Published Dec 29, 2017, 12:33 PM IST


அன்னாசி

** தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. 

** கொல்லிமலை போன்ற இடங்களில் பெரியளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். 

** இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும்.  இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

** நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைக் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

** இப்பழம் மாதவிலக்கைக் தூண்டும், ஆகையால் கருவுற்றவர் உண்ணாதிருத்தல் நலம். 

** இந்தப் பழத்தை அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும்.

** இலைச்சாறு 10 மி.லி யில் சிறுது சர்க்கரைக் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.

** பழச்சாற்றைச் சற்று சூடுசெய்து குடித்துவர வாந்தி, வயிற்றிக் கடுப்பு, காமாலை ஆகியவை தீரும்.

** பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி நாள்தோறும் இருவேளை 10-15 மி.லி உண்டுவரத் தாகம், வாந்தி, வெள்ளை, வெட்டை சுவையின்னமை ஆகியவை தீரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios