இந்த ரெசிபியை செய்வதற்கு முதலில் இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
Image credits: social media
Tamil
நெய் - 1 ஸ்பூன்
பிரெட்டை டோஸ்ட் செய்வதற்கு ஒரு ஸ்பூன் நெய் தேவைப்படும். நெய் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
சர்க்கரை - தேவையான அளவு
உங்கள் சுவைக்கு ஏற்ப தேவையான அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள். நாட்டுச் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.
Image credits: iSTOCK
Tamil
பால் - 1 கப்
இனிப்பான சாஸ் தயாரிப்பதற்காக ஒரு கப் காய்ச்சிய பால் தேவை.
Image credits: Freepik
Tamil
பால் பவுடர்
சுவையை மேலும் அதிகரிக்க, ஒரு ஸ்பூன் பால் பவுடர் தேவைப்படும்.
Image credits: Getty
Tamil
பேரீச்சை - 2
இயற்கையான இனிப்பு மற்றும் கூடுதல் சத்துக்காக இரண்டு பேரீச்சம்பழங்களை எடுத்துக்கொள்ளவும்.
Image credits: Getty
Tamil
இலவங்கப்பட்டை தூள் - 1 ஸ்பூன்
நல்ல வாசனை மற்றும் சுவைக்காக ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் தேவை.
Image credits: Pinterest
Tamil
பிரெட்டின் ஓரங்களை நீக்கி நெய் தடவவும்
பிரெட் ஓரங்களை வெட்டி நீக்குங்கள். பிறகு அதன் மேல்புறம் நெய் தடவி, சிறிதளவு சர்க்கரையைத் தூவுங்கள். ஒரு பேனை சூடாக்கி, சிறிது நெய் விட்டு பிரெட்டின் இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.
Image credits: Getty
Tamil
பால் பவுடர் சேர்த்து கலக்கவும்
மற்றொரு பாத்திரத்தில் முக்கால் கப் பாலை ஊற்றி சூடாக்கி, அதில் அரை டேபிள்ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
Image credits: Social media
Tamil
பேரீச்சையை பாலுடன் சேர்த்து அரைக்கவும்
5 பேரீச்சம்பழங்களுடன் கால் கப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அடுப்பில் உள்ள பால் சற்று வற்றியதும், அரைத்த பேரீச்சை விழுதைச் சேர்த்து கெட்டியாகும் வரை வேகவிடுங்கள்.
Image credits: Getty
Tamil
இலவங்கப்பட்டை தூள் சேர்த்து பரிமாறவும்
கடைசியாக, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கலக்கலாம். தயாரித்து வைத்துள்ள இந்த சாஸை, டோஸ்ட் செய்த பிரெட்டின் மேல் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.