நம்ம உடம்புல இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
health-food Aug 27 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
நட்ஸ், விதைகள்
பாதாம், பூசணி விதை, எள் போன்றவற்றில் துத்தநாகம் மற்றும் செம்பு ஆகிய தாதுக்கள் அதிகளவில் உள்ளன. கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான என்சைம்களின் செயல்பாட்டைத் துத்தநாகம் ஆதரிக்கிறது
Image credits: Asianet News
Tamil
பால் பொருட்கள்
கொழுப்பு நிறைந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், பனீர் போன்ற பால் பொருட்கள் உடலுக்குத் தேவையான புரதத்தை வழங்குகின்றன. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
Image credits: Our own
Tamil
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
Image credits: Getty
Tamil
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, சரும செல்களைப் புதுப்பிக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.
Image credits: Getty
Tamil
பருப்பு வகைகள்
பாசிப்பருப்பு, மசூர் பருப்பு, துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் கொலாஜன் உருவாவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.
Image credits: Getty
Tamil
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.