ginger increases the memory power

இஞ்சித் துவையலை ருசிக்காதவர்கள் மிக குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியின் பயன்பாடு அதிகம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் சேர்க்கும் பழக்கமும் உண்டு.

இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு. கபம், வாதம், சிலேத்துமம் ஆகியவற்றையும் போக்கும்.

பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை தரும்.

ஞாபக சக்தியை வளர்க்கும். கல்லீலைச் சுத்தப்படுத்தும்.

வயிற்றில் சேர்ந்த வாயுவைப் நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.

எலுமிச்சம் பழரசம், இந்துப்பு இரண்டையும் சேர்த்துப் போட்ட இஞ்சி ஊறுகாய் கபத்தையும், வாதத்தையும் போக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய்களையும், ஆஸ்துமா ஆகியவற்றையும் இஞ்சி போக்கும்.

நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது.

இவ்வளவு மகத்துவங்களைப் பெற்றுள்ள இஞ்சியை தினமும் சாப்பிட்டு தெம்படையுங்கள்.

ஆனால் ஒரு எச்சாpக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.