Getting the practice done in the same way is ...

தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும்,

உடல் சுறுசுறுப்பு அடையும்,

தேவையற்ற கொழுப்பு குறையத் தொடங்கும்”

இப்படியெல்லாம் மருத்துவர்கள் நடைபயணத்தின் பயன்களை அடுக்கு கொண்டே போவர்.

ஆனால் எப்படி நடக்கவேண்டும்? எவ்வளவு வேகமாக நடக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொண்டு நடந்தால்தான் மேற்கூறிய பலன்களை அடைய முடியும்.

** நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி,

** இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி.

** எதிர்பார்க்கும் பயன் கிடைக்கவேண்டுமெனில் ஆண்களின் நடைவேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும்.

** பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும்.

** தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

இப்படி நடைப்பயிற்சியை மேற்கொண்டு அதிக பலனை அடையலாம்.