Asianet News TamilAsianet News Tamil

தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்…

Everyday Pistacha Cabbage can prevent cancer from coming ...
Everyday Pistacha Cabbage can prevent cancer from coming ...
Author
First Published Aug 5, 2017, 1:31 PM IST


நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும். ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடும்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம்.

ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும்.

இதிலுள்ள வைட்டமின் பி6 இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண்களில் உள்ள திசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்களை பாதுகாக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios