Asianet News TamilAsianet News Tamil

கல்லீரலை பாதுகாக்க பேரீச்சம் பழ விதைகளை சாப்பிட்டாலே போதும்...

Enough to eat dates fruit seeds to protect the liver ..
Enough to eat dates fruit seeds to protect the liver ...
Author
First Published Feb 26, 2018, 1:04 PM IST


பேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. 

சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் டீ.என்.ஏ க்கள் என்பவை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு இந்த பேரீச்சம் பழ விதைகள் பெரிதும் உதவி புரிகின்றன.

பேரீச்சம் பழ விதைகளை உட்கொள்வதற்கு ஏற்றவாறு எவ்வாறு தயார் செய்வது?

செய்முறை:

பேரீச்சம் பழ விதைகள் சிலவற்றை எடுத்து, அவற்றை கழுவி நன்கு உலர விடவும். சிலவேளை அவை நன்றாக உலர 3 நாட்கள் கூட செல்லலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அவை நன்றாக உலரியவுடன் அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கோப்பி பொடியைப் போன்று தேநீரில் கலந்து உட்கொள்ளலாம்.

பேரீச்சம் பழ விதையை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...

** சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிப்படையாது தடுக்கும் புரோவந்தசைனைடின்ஸ் இந்த பேரீச்சம் பழ விதையில் அதிகளவில் காணப்படுகின்றது. அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

** இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் நீரிழிவு சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த பேரீச்சம் பழ விதை முற்றுப்புள்ளி வைக்கின்றது.03. டீ.என்.ஏக்கள் பாதிப்படைவது தடுக்கப்படுகின்றது

** வேதியியல் ரீதியாக தூண்டப்பட்டு அதன் மூலம் பாதிப்படைந்த கல்லீரலை இந்த விதைகள் இனிதே குணமாக்குகின்றது. கல்லீரல் நச்சுத்தன்மை அடைதல் மிக துல்லியமாக தடுக்கப்படுகின்றது.

** மனிதர்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றுக்களுக்கு எதிராக போராடும் வல்லமை கொண்டது. ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும் அதனை முற்றாக குணமாக்கும் சக்தி கொண்டவை இந்த பேரீச்சம் பழ விதைகள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios