Asianet News TamilAsianet News Tamil

முள்ளங்கி உடம்பிற்க்கு நல்லதுனு தெரியும்! முள்ளங்கி கீரை இத்தனை நோய்களை தீர்க்கும் என்று தெரியுமா?

இதனை தவிர பசியின்மை முதல் ஆண்களின் உயிரணு உற்பத்தி வரை பல்வேறு மருத்துவ பயன்களை தரும் முள்ளங்கி கீரையின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

Enormous Health Benefits of Radish Leaves
Author
First Published Mar 26, 2023, 7:50 AM IST

முள்ளங்கி கீரை :

முள்ளங்கிக் கீரை எனில் முள்ளங்கி தாவரத்தின் இலையாகும். முள்ளங்கியை பறிக்கும் போது இலையுடன் தான் பறிப்பார்கள் சந்தைகளில் விற்கும் போது கூட முள்ளங்கி இலையுடன் தான் விற்பார்கள். ஆனால் நம்மில் பலரும் அந்த இலைகளை வாங்கும் இடத்திலேயே வெட்டி அதனை தூர எறிந்து விட்டு தான் வருவீர்கள். முள்ளங்கியில் வெள்ளை, சிவப்பு என இரண்டு விதங்களில் கிடைக்கின்றன.

முள்ளங்கி கீரை சமையல் :

இந்த முள்ளங்கி கீரையை பயன்படுத்தி சாம்பார், பருப்பு கூட்டு, சட்னி, சப்பாத்தி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். கீரையை குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும் பட்சத்தில் இப்படி செய்து கொடுத்தால் சாப்பிட வைக்கலாம். 

முள்ளங்கிக் கீரை நன்மைகள் :

முள்ளங்கிக் கீரைக்கு உஷ்ணத்தை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளதால், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் முள்ளங்கிக் கீரையை அவர்கள் உணவு பட்டியலில் தாராளமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். 

கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்று ஃபிர்னி ஃபலூடா செய்து சாப்பிடுங்க! எவ்ளோ செய்தாலும் பத்தவே பத்தாது.

முள்ளங்கிக் கீரை மருத்துவப் பயன்கள்:
 

  • அரைத்த முள்ளங்கி கீரையை வெந்தயம் ஊற வைத்துள்ள தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும்.
  • முள்ளங்கிக் கீரையை சாறு எடுத்து அதனை 40 மில்லி அளவில் தினமும் குடித்து வர (சுமார் 21 நாட்கள்) சிறிய அளவிலான சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும். தவிர சிறுநீர்ப்பை வீக்கத்தையும் குணப்படுத்தும்.
  • முள்ளங்கிக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து வேக வைத்து சாப்பிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாக போகும்.
  • முள்ளங்கிக் கீரைச் சாற்றில் பொடித்த வெல்லம் சேர்த்து அருந்தினால் கல்லீரல் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
  • முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் மிளகினை பொடித்து அதனை அதிகாலையில் 2 சிட்டிகை எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட நன்றாக பசி எடுக்கும்.
  • முள்ளங்கிக் கீரை சாறுடன் ஊறவைத்த பாதாம் பருப்பை சேர்த்து அரைத்துச் சாப்பி ஆண்மை சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
  • முள்ளங்கிக்கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • முள்ளங்கி கீரை சாறில் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து காலை மாலை என தினமும் இருவேளை சாப்பிட்தி வர சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும்.
Follow Us:
Download App:
  • android
  • ios