Do you want a strong body then eat these foods
ஆண்கள் அனைவருக்குமே பாகுபலி போல அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை.
இதற்காக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
அவையாயவன:
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கிரியேட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இரும்புச்சத்து வலிமையை அதிகரிக்கவும், கிரியேட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. எனவே ஜிம் செல்லும் நபர்களுக்கு மாட்டிறைச்சி, சிக்கன் சிறந்த உணவாக இருக்கும்.
பால் மற்றும் முட்டை
பாலில் புரோட்டீன், கால்சியம் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் பாலை அருந்துவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
முட்டையிலும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மீன்
மீனில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதனை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது நல்லது. முக்கியமாக கொழுப்புகள் குறைவாக இருக்கிறது.
வேர்க்கடலை வெண்ணெய்
இதில் புரோட்டீன்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன. உடல் கட்டமைப்பில் பெரிதும் உதவியாக இருப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக்கவும் செய்கிறது.
ஓட்ஸ்
ஜிம் சென்று வந்தவுடன், பால் சேர்ந்த ஓட்ஸ் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவியாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சர்க்கரைகள் உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும். மேலும் இதில் கொழுப்புகள் ஏதும் இல்லாததால், இதனை உட்கொள்வது இன்னும் சிறந்தது.
பாதாம்
பாதாமில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துகள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. மேலும் செரிமானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
