Do you know Tulsi has the power to heal the ulcers in the stomach ....

துளசி, தெய்வீக மூலிகை. இதில் ராமதுளசி, கிருஷ்ண துளசி, வனதுளசி போன்ற வகைகள் உண்டு. 

கரும்பச்சை நிறத்தில் இருக்கும் கிருஷ்ண துளசி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. வணதுளசியில் நறுமண எண்ணெய் அதிகம் உள்ளது. 

துளசியில் இருக்கும் நறுமண எண்ணெய் வகைகள்தான் அதன் மனத்திற்கும் மருத்துவ குணங்களுக்கும் காரணம். 

துளசியில் இருக்கும் யூஜினால் என்ற வேதிப் பொருள் சளியை அகற்றும் சக்தி கொண்டது. யூஜினால் நீராவி மூலம் துளசியில் இருந்து பிரித்தெடுப்பார்கள்.

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் அனைத்திலுமே மருத்துவ குணம் இருக்கிறது.

துளசி உஷ்ண வீரிய தாவரம். இது திசுக்களை உலர செய்யும் இயல்புடையது. திசுக்களில் ஆழமாக சென்று நீர் தன்மையை குறைக்கும். அதனால் உடலில் கபமும், வாதமும் சீராகும்.

வாதம் காரணமாக உடலில் ரத்த ஓட்ட தடை, வலி, வீக்கம் தோன்றும். இவைகளை துளசி சாறு கஷாயம் சீர் செய்யும். வீக்கத்திற்கு துளசி இலையை அரைத்து பற்று போடவேண்டும். 

கபம் உடலில் அதிகரித்தால் உடல் மந்தம், சோர்வு, தொண்டை கட்டு, சளி, இருமல், மூச்சிரைப்பு போன்றவை உருவாகக்கூடும். அத்தகைய காலகட்டங்களில் துளசி சாறு 50 மி.லி, இஞ்சி சாறு 2 தேக்கரண்டி, தேன் இரண்டு தேக்கரண்டி கலந்து சாப்பிடவேண்டும். 

நுரையீரலில் உள்ள சளியை அகற்றும் துளசி வியர்வையை அதிகரிக்கும். அதன் மூலம் பல்வேறு உடல் தொந்தரவில் இருந்து விடை பெறலாம்.

குழந்தைகள் சளி, இருமலால் அவதிப்பட்டால் 5 மி.லி துளசி சாற்றை சிறிது சுடு நீரில் கலந்து கொடுக்க வேண்டும். இத் ஒரு எளிய குழந்தை வைத்தியம். 3 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும்.

வாய்புண், வாய் நாற்றம் கொண்டவர்கள் துளசி இலையை மென்று வாய் கொப்பளிக்க வேண்டும். சிறுநீரகத்தில் உண்டாகும் அதிகப்படியான யூரிக் ஆசிட்டை வெளியேற்றும் சக்தியும் துளசிக்கு இருக்கிறது. சிறுநீரக கல், சிறுநீரக தொற்று போன்றவைகளையும் இது குணப்படுத்தும்.

துளசி சிறந்த கிருமிநாசினியாக செய்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளால் உண்டாகும் நோய் தொற்றுகளை அழிக்கும். துளசி கஷாயம் தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோயின் வீரியம் குறையும்.

துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது.