Do you know The food cooked tomatoes to prevent prostate cancer are ...
புரோஸ்டேட் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தொpவிக்கின்றன.
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது.
விளைவு
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது. அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.
தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.
மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருக்கிறது என்பது கொசுறு தகவல்.
