Do you know Tea has to protect the teeth ...

தேநீரில் அருந்துவதால் அதிலிருக்கும் வாசனை மனதிற்கு உற்சாகத்தை தரும்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.

தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.

தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

அத்துடன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது.

பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.

இனி பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.