Do you know Sugar cabbage is enough to reduce body weight ...
குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி, கடுமையான உடற்பயிற்சி பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர்.
எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போ இதை முயற்சித்துப் பாருங்கள்.
சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறை:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆய்வின் மேற்கொண்டனர்.
அதில், குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது.
எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது” என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
