இதயத்தை இந்த விஷயங்கள் செய்வதன்மூலம் பலமாக்கலாம். இதயநோய் வராமல் தடுக்கலாம். 

** உடற்பயிற்சி

உடல் எடை சரியாக பராமரித்து வருவதும், தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்வதும் இதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

** உடல் உழைப்பு

உடலுக்கு வேலை தராமல், ஒரே இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் கூட இதய நோய் வரும் என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் தினமும் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்காவது உடல் உழைப்பு சம்மந்தமான வேலைகள் செய்ய வேண்டும்.

** புகைப்பிடித்தல்

புகை இதயத்துக்கு பகை! புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு, அந்த பழக்கம் இல்லாதவர்களை விட 6 மடங்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.

** உணவு பழக்கம்

கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.