Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்…

Do you know Rubbing fingernails can prevent hair loss
Do you know Rubbing fingernails can prevent hair loss
Author
First Published Aug 2, 2017, 1:27 PM IST


தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம்.

ஆனால் அந்த தலைமுடி உதிர்வதை தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது.

என்ன நம்ப முடியவில்லையா?

கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம்.

சரி. கைவிரல் தேய்ப்பது மற்றும் அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்…

செய்யும் முறை

* இரண்டு கை விரல்களையும் மடித்து, விரல் நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும்.

* இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.

எப்படி?

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.

நன்மைகள்

இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும்.

முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.

செய்யக்கூடாதவை

1.. கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.

2.. அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.

3.. மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்.

4.. கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல் நகங்கள் தான் பாதிக்கப்படும்.

பின்குறிப்பு

முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.

Follow Us:
Download App:
  • android
  • ios