do you know ragi has more calcium than milk

பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியம் உள்ளது.

கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெரும்.

கேழ்வரகு நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தணிக்கிறது.

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்.

இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும்.

நாள்தோறும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.

அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும்.

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்க வல்லது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக செய்து சாப்பிடலாம்.

கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன.

கர்ப்பிணி பெண்கள் தினமும் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும்.

உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு.

இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. 

நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.