Do you know Proper diet and exercise are enough to stay old and mature ...
** ஆண்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் மறைமுக தாக்கமாக இருந்து வருகிறது டெஸ்டோஸ்டிரோன். எனவே, டெஸ்டோஸ்டிரோன் அளவை உடலில் ஆண்கள் சரியாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
** உடல் எடையை உங்கள் உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ப பராமரித்தல். சமீபத்திய ஆய்வு ஒன்று, உடல் எடை அதிகமாக இருக்கும் ஆண்களிடம் தான் அதிகமாக ஆண்மை குறைவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. எனவே, உடல் எடை மீது அதிக அக்கறை அவசியம்.
** தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். எடை தூக்கி உடற்பயிற்சி செய்வது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை இயற்கையாக அதிகரிக்க பயனளிக்கிறது.
** டெஸ்டோஸ்டிரோன் உடலில் உருவாக ஜின்க் சத்து மிகவும் அவசியம். எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கீரை உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பசலைக்கீரையில் ஜின்க் சத்து அதிகம் இருக்கிறது.
** அதிகாலையில் சூரிய வணக்கம், யோகா, அல்லது நடைபயிற்சி செய்யுங்கள். டெஸ்டோஸ்டிரோன் அளவை சரியான அளவில் பராமரிக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. அதிகாலை சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு அதிகமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.
** அதிகமாக மன அழுத்தம் கொள்ள வேண்டாம். கோவம் அல்லது அலுவலக வேலை பளுவின் காரணமாக அதிகம் மன அழுத்தம் கொள்ள வேண்டாம், இது உங்கள் டெஸ்டோஸ்டிரோனை வலுவாக பாதிக்கும்.
** அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டரியப்பட்டுள்ளது. எனவே, அதிகமாக சர்க்கரை / இனிப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டாம். உங்கள் உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுகிறது.
** பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் உணவுகளை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வதால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க முடியும். அதிகமான காபி வேண்டாம். ஏனெனில், அதிகமாக காபி பருகுவதால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைக்கப்படுகிறது.
** ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு சீரான முறையில் இருக்க வேண்டும் எனில் நல்ல உறக்கம் தேவை. தூக்கமின்மையும், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைபாட்டிற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது.
வயதானாலும் ஆண்மையுடன் இருக்க சரியான உணவும், உடற்பயிற்சியுமே போதும்...
