தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்?

தலைக்கு குளித்ததும், அதை சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொள்வதால் தலையில் நீர் தங்கி, அது தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.

தலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.

சாப்பிடாமல் வெளியில் செல்லும் போது, சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் தலைவலியை உண்டாக்கும்.

உடலில் வியர்வையால் ஏற்படும் அதிக துர்நாற்றத்தை மறைக்க அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் மூலமும் அடிக்கடி தலைவலி ஏற்படும்.

கம்ப்யூட்டர், மொபைல், டிவி ஆகியவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கழுத்து வலி மற்றும் தலைவலி ஏற்படும்.

ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியம். அந்த தூக்கம் குறைவாக இருந்தால், மூளை மற்றும் உடலின் புத்துணர்ச்சி குறைந்து தலைவலி அதிகமாகும்.

குளிர்ச்சி நிறைந்த பானங்கள் அல்லது ஐஸ் க்ரீம்களை அதிகமாக சாப்பிட்டால், அது மூளையை உறைய வைத்து தலைவலியை அதிகமாக்கிவிடும்.

புத்தகத்தை படுத்துக்கொண்டு அல்லது குறைவான வெளிச்சத்தில் படித்தால், கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, தலைவலியையும் உண்டாக்கும்.