1. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் . அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .

2. 1 ஸ்பூன் இஞ்சில்ச் சாற்றில் சிறிது தேன் கலந்து அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை மறையும்.

3. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில் (scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி அதிகமாகும் .

4. வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.

5. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

6. முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo) உபயோகியுங்கள்.

7. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும்.

8. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp) செய்து வாருங்கள்.

9. மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம் இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி தாராளமாக வளரும்.

10. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

11. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர துணை செய்யும்.

12. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.

13. கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.

14. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.

15. பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம் மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாய் வளரும்.