Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டால் கணையப் புற்றுநோய் வராது....

Do you know If you eat cabbage pancreatic cancer will not come ..
Do you know If you eat cabbage pancreatic cancer will not come ...
Author
First Published Feb 21, 2018, 3:36 PM IST


புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி இந்த காய்கறிகளுக்கு உண்டு. 

** உருளைக்கிழங்கு: 

புற்றுநோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்பாகத்தில் இருப்பதால், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும். அதிலும், பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும், உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.

** பாகற்காய்: 

விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு, மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதை தவிர்க்க வேண்டும்.

** வெங்காயம்: 

வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால், வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது. தக்காளி: ஆண்கள் வாரம் பத்துமுறை, தக்காளி சாப்பிட்டால், புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால், குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து, 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் உள்ள லைகோபீனின் சக்தியானது, கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.

** முட்டைகோஸ்: 

கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும், நோயை தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி.

Follow Us:
Download App:
  • android
  • ios