Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? எந்த விஷக்கடியாக இருந்தாலும் ஐஸ், வெந்நீர் ஒத்தடம் தரக் கூடாது…

Do you know Ice hot water should not be given ..
Do you know Ice hot water should not be given ...
Author
First Published Oct 31, 2017, 1:54 PM IST


குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்தால், அதன் கொடுக்கு ஒட்டியிருந்தால், அதை மிகக் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில், அதில்தான் விஷம் இருக்கும். நாம் நேரடியாகப் பிடுங்கி எடுத்தால், அதில் இருக்கும் விஷம் இன்னும் உள்ளே இறங்க வாய்ப்பு உண்டு. அப்படியே சாய்வாக ஒரு கத்தியால் சீய்ப்பது போல, கொடுக்கைச் சீவி விட வேண்டும்.

தேள் கொட்டினால், டாக்டரிடம் போய்விட வேண்டும். நாம் எதுவுமே செய்ய முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் விஷம் ரத்தத்தில் பரவும் வாய்ப்பு உண்டு.

பாம்புக்கடி என்று நிச்சயமாகத் தெரிந்தால், அது நிச்சயம் தீவிர சிகிச்சை தேவைப்படும் பிரச்னை. கடிவாயில் வாயைவைத்து உறிஞ்சுதல், கடித்த இடத்துக்கு மேலே இறுக்கிக் கட்டுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவற்றால் ரத்த ஓட்டம் தடைபட்டு, விஷம் வேகமாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கம் ஆகாமல் இருந்தால், அவரிடம் பேசி, ‘ரிலாக்ஸ்’ செய்யலாம்.

கை அல்லது காலில் பாம்பு கடித்திருந்தால், அதை அசைக்கக் கூடாது. அப்படியே, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது.

எந்த விஷக்கடி என்றாலுமே, குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அரை மயக்கத்தில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுத்தால், அது நுரையீரலுக்குள் சென்று விடும்.

நாய்க்கடி என்றால், அந்த இடத்தை சோப் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

எந்தக் கடியாக இருப்பினும் ஐஸ் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக் கூடாது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios