Do you know Grinding the leaves is painless
1.. கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள்.
பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாககிறது.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.
இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.
கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது. மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.
2.. மூட்டு வலி உள்ளவர்கள் முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
3. ஔரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
4. குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.
5. செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
6. வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
