கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்புக்கு இயற்கை மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளை.

அதேபோன்று துளசியும் நலல மருந்து. துளசி இலை, ஏலக்காய், சுக்கு சேர்த்து நசுக்கி 1 தம்ளர் நீரில் கலந்து காய்ச்சி, அரை தம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் பாதிப்புகள் அகலும்.

துளசி கஷாயம் ஆஸ்துமா வராமலும், வளர விடாமலும் தடுக்கும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும்.

கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமாகச் செயல்படும்.

குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் துளசி தடுக்கும்.